உக்ரைனுக்காக ஐ.நா சிறப்பு அவசர கூட்டத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி!
உக்ரைன் தொடர்பான ஐ.நா பொதுச் சபையின் சிறப்பு அமர்வு ஒரு நிமிட மௌனத்துடன் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் படையெடுப்பு பற்றி விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) ஒரு சிறப்பு அவசர அமர்வைத் தொடங்குகின்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்பு அவசர 11-வது கூட்டம் இன்று திங்கட்கிழமை (28-02-2022) இரவு 8.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் உக்ரைனுக்காக 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது உக்ரைனுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் தாக்குதல் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் முன், ஐ.நாவின் 193 உறுப்பினர்களை UNGA தலைவர் அப்துல்லா ஷாஹித், தியானத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.