மனித குலத்திற்கு எதிரான போரில் புலம்பெயர் தமிழரின் நிலைப்பாடு?
மனித குலத்துக்கு எதிராக ஓர் யுத்தம் நடைபெற்றுகொண்டிருக்கின்றது. ரசியாவின் மக்கள் நலன்களிற்கு எதிராக தமது சுயநலத்துடன் கூடிய இராணுவ ஆட்சி நடாத்தும் புட்டினால் போர் ஆரம்பிக்கபட்டுள்ளது என சுவிட்சர்லாந்தில் உள்ள சமூகச் செயற்பாட்டாளர் சுதா அவர்கள் தனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
போர் அதிகார ஆளுமைகளை மீட்பதற்கும் சமநிலையை பேணுவதற்காகேவ நடைபெறுகின்றது. நாட்டோ தரப்பின் விரிவாக்கம் ரசியத்தரப்பிற்கு நெருக்கடிகளை கொடுத்திருக்கலாம். அதனால் ரசியாவும் உக்கிரனை நடுநிலை நாடாக வைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுப்டிருக்கலாம்.
நாட்டேவில் இணைந்த நாடுகள் தம்மை ரசியாவின் தலையீடுகளில் இருந்து தவிர்த்து மேற்குலகத்துடன் கைகோர்ப்பதற்காகவே இணைந்தன. நாட்டோவின் தவறுகளும் இந்த யுத்தததி்கான ஊண்றுகோலாக அமைந்திருக்கலாம். எப்படி உலக நாடுகள் கிட்லரின் நடவடிக்களை குறைத்து மதிப்பிட்டு இரண்டாம் அதிர்ச்சியுடன் முகம்கொடுத்தனர்.
அதே போன்று அபாய சமிக்கைகள்வந்த போதும் மேற்குலகின் அவதானிமின்மைையை மேற்குலக அரசியல்அவதானிகள் அரசியல் வாதிகள் அனைவரும் ஏற்றுகொள்கின்றனர்.
எந்த ஆதிக்கதரப்பினாலும் தமது ஆளுமையை நிலைநாட்டும் அத்துமீறிய யுத்தங்களை ஆதரிப்பதோ அல்லது அவர்களல் நியாயப்படுத்தப்படும் யுத்தத்திற்கான பிரச்சாரங்களிற்கு முண்டு கொடுக்க முடியாது. இந்த யுத்தமானது ஒரு தனிமனிதனால் தீர்மாணிக்கப்பட்ட யுத்தம்.
ரஷ்ய மக்களின் விருப்பங்கிற்கு மாறாக நடைபெறும் யுத்தம். ரசியாவில் மக்கள் தனிமனித சுதந்திரத்திற்காகவும் எதிர்கருத்து அரசியலிற்காகவும் தமது உயிர்களை தியாகம் செய்து போராடிவருகின்றனர்.
ரஷ்யாவில் அரசிற்கு எதிராக விமர்சித்த அரசியல்வாதிகள் புத்திஐீவிகள் எழுத்தாளர்களிற்கு நடைபெற்ற சம்பவங்கள் யாவரும் அறிந்ததே.
ரஷ்யாவின் அனைத்து ஊடகங்களும் அதிபர் விளாடிமிர் புட்டினின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஊதுகுழல்கள். இவை இப்படி இருக்க புலம்பெயர்ந்து வந்து்ள எமது உறவுகளின் அரசியல்வாதிகள், புத்திஐீவிகள், எழுத்தாளர்கள் ரசியாவின் யுத்திற்கான நியாத்தினை அமோதித்த கருத்துக்களை எழுதிவருகின்றனர்.
எது எப்படி இருப்பினும் மேற்குலகில் எவ்வித மாற்று கருத்துக்களை பேசுவதற்கும் உரயாடுவதற்கான தளம் உள்ளது.
எவ்வித மாற்று கருத்துக்ளிற்கும் இடமளிக்காது இராணுபலத்துடன் கூடிய தனி நபரினால் மேற்கொள்ளப்படும் யுத்தநியாயத்திற்கு பின்னால் எப்படி முண்டு கொடுக்க முடியும்.
உக்ரைன்னிற்கும் மேற்குலகிற்கு கொடுக்கும் ஆதரவு அமெரிக்க ஆதிக்கத்தினை மேலோங்க செய்யும் என்ற கருத்துக்கு மாற்று கருத்து இல்லை.
ஆனாலும் அணு ஆயுதத்தினை கொண்டு அனைத்து மேற்குலக நாடுகளையும் மக்களையும் அச்சத்து உள்ளாக்கும் ஓர் யுத்த வெறியனின் நடவடிகளிற்கு எதிராகவே இப்பொழுது மனித குலம் அணிதிரள வேண்டும்.
அடுத்த ஆதிக்க சக்திகளி்கான போராட்டங்களும் நிராகரிப்புகளும் நடைபெற்றே ஆகவேண்டும். அதிபர் விளாடிமிர் புட்டின் போன்ற ஆதிக்கவாதிக்கு முண்டு கொடுத்துதான் உலக சமநிலை பேணப்பட வேண்டுமா என சிந்திக்கவேண்டும்.