அனைத்து பகுதியில் இருந்தும் உக்ரைனை தாக்குங்கள்: ரஷ்யாவின் அதிரடி உத்தரவு
உக்ரைன் நாட்டின் மீது அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் தொடுக்க படையினருக்கு ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
உக்ரைன் தற்காத்துக் கொள்ள, ரஷ்யப் படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிழவி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கிவ்வை ரஷ்யப் படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்து வருகின்றது.
இதற்கிடையில், போரை முடிவுக்கு கொண்டுவர பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்திருந்தது.
இதேவேளை, பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனை சுற்றி வளைத்து அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் நடத்த ரஷ்யப் படையினருக்கு அந்நாட்டு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.