உக்ரைனின் இரண்டாவது பிரபலமான நகரத்திற்குள் நுழைந்த ரஷ்யப் படைகள்! அச்சத்தில் மக்கள்
உக்ரைன் நகரமான கார்கீவுக்குள் ரஷ்யப்படைகளின் இலகுரக ராணுவ வாகனங்கள் நுழைந்துவிட்டதாக கார்வீக் பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் ஒலெக் சினெகுபோவ் கூறியுள்ளார்.
கார்க்கீவு நகர மையத்தில் ரஷ்யப் படைகள் இருப்பதாகக் கூறி குடியிருப்பாளர்களை தங்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்குமாறு விலியுறுத்தியுள்ளார்.
"தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறாதீர்கள். யுக்ரேனிய ஆயுதப் படைகள் எதிரிகளை எதிர்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் தெருக்களில் நடமாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பு, சில காட்சிகளில், யுக்ரேனிய கார்கீவ் நகரத்தின் தெருக்களில் சில ரஷ்ய ராணுவ கார்கள் நுழைந்தை காட்டியுள்ளது.