உக்ரைன் - ரஷ்யா போரால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் யார் தெரியுமா?
ரஷ்யா, பேச்சு வார்த்தைக்கு அழைத்து விட்டு, அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு முன்னரே எறிகணை தாக்குதலை அகோரமாக செய்யத் தொடங்கியுள்ளது.
உக்ரைனுக்கு யாரும் உதவவில்லை என்ற நிலை மாறி, ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு நேரடியாக உதவ முன் வந்துள்ளதோடு, ரஷ்யாவுக்கு எதிராக கடும் தடைகளை தொடர்ந்து போட்டு வருகிறது.
இது எங்கு போய் முடியுமோ என யாராலும் ஊகிக்க முடியவில்லை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) அணு ஆயுதங்களை தயார் செய்யச் சொல்கிறார்.
அதற்கு எதிராக ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy), ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்து உதவிகளை பெற முயல்கிறார்.
எது எப்படியோ போர் என ஒன்று வந்தால் சாமான்ய மக்களது இயல்பு வாழ்க்கையை கெட்டு விடும். மக்கள் மன அமைதியை இழந்து விடுவார்கள். போரிட்ட நாடுகள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும்.
யாரும் நினைத்தது போல இலகுவாக இந்த போர் முடியாது போல உள்ளது? என இந்த கருத்தை முகநூலில் ஜீவன் பிரசாத் என்பவர் பதிவிட்டுள்ளார்.