உக்ரைனின் அதிரடி தாக்குதல்: கொத்து கொத்தாக கென்று குவிக்கப்பட்ட ரஷ்ய படைவீரர்கள்
உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அறிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (25-03-2022) மாலை ஆற்றிய விசேட உரையின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
போர் தொடங்கியதில் இருந்து 16,000க்கும் மேற்பட்ட ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மூத்த இராணுவத் தளபதிகளும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் படையினர் நாட்டின் தெற்கிலும், டான்பாஸில், கார்கிவ் திசையிலும், கிவ் பிராந்தியத்திலும் எதிரிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து தடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளாதர்.
இதனிடையே, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களில் இருந்து மொத்தம் 37,606 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
குறிப்பாக, 26,477 மரியுபோல் குடியிருப்பாளர்கள் மனிதாபிமான நடைபாதை வழியாக மரியுபோலில் இருந்து சபோரிஜியாவிற்கு வெளியேற்றப்பட்டனர், என்று அவர் தெரிவித்துள்ளார்.
நகரத்தின் நிலைமை முற்றிலும் சோகமாகவே உள்ளது. ரஷ்ய இராணுவம் நகரத்திற்குள் எந்த மனிதாபிமான உதவியையும் அனுமதிக்கவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.