உக்ரைன் - ரஷ்யா போரில் நடந்த தாக்குதலில் இஸ்ரேலியர் உயிரிழப்பு
ரஷ்ய போருக்கு முன்னதாக உக்ரைனில் இருந்து மால்டோவன் எல்லைக்கு சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் இன்று 6வது நாளாக தொடர்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலை சேர்ந்த ரோமன் ப்ராட்ஸ்கி தனது வாகனத்தில் உக்ரைனில் இருந்து மால்டோவன் எல்லைக்கு சென்றார். அந்த வாகனம் தாக்கப்பட்டது. அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உக்ரைனில் வசிக்கின்றனர்.
அவர்களுடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. ப்ராட்ஸ்கியின் மரணம் குறித்து அவரது பெற்றோருக்கும் அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேலிய பிரதமர் நப்தாலி பென்னட் ப்ராட்ஸ்கி குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார், மேலும் இஸ்ரேலியர்கள் தாயகம் திரும்புவதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறினார்.