ரஷ்யாவின் சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை அழித்த உக்ரைன்
ரஸ்யாவின் நீண்டதூர சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்துள்ளன சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு தெற்கே சொல்ட்சி 2 விமானதளத்தில் டுப்பொலொவ் டு22 விமானம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை உறுதி செய்ய முடிவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் எனினும் விமானமொன்று சேதமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ தெரிவித்துள்ளது. சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானம் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லக்கூடியது.
ஆளில்லா விமானதாக்குதல்
சுப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை உக்ரைன் நகரங்களை தாக்குவதற்கு ரஸ்யா இவற்றை பயன்படுத்தியுள்ளது. ஆளில்லா விமானதாக்குதல் சனிக்கிழமை நொவ்கொரோட் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளதாக ரஷ்ஸ்யா தெரிவித்துள்ளது.
நொவ்கொரோட் பிராந்தியத்தில் டு 22 விமானங்களின் தளங்கள் அமைந்துள்ளன.
ஆளில்லா விமானமொன்றை வான்வெளி கண்காணிப்பு பிரிவினர் கண்டு அதன் மீது தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள ரஷ்யா, உயிரிழப்புகள் இல்லை எனவும் கூறியுள்ளது.