பிரித்தானியாவின் அதிரடி தடை; கருணா, இராணுவத் தளபதிகள் குடும்பத்தின் நிலை!
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதிகள் கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது.
பிரிட்டன் இன்று இலங்கையின் உள்நாட்டு போரின்போது பாரதூரமான மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டவர்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.
முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட, முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜெயசூரிய. கருணா அம்மான்.ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளது.
இது தொடர்பில் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளதாவது. இந்நிலையில் பிரித்தானிய தடையின் பின் கருணா மற்றும் மூன்று இராணுவத் தளபதிகள் குடும்பத்தின் நிலை என்னவாயிருக்கும் ?
பல்லாயிரக்கணக்காண அப்பாவி தமிழர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் தப்பித்துவிட்டோம் என மகிச்சியில் திளைத்திருந்த வேளையில் அரசன் அன்றுகொல்வான் தெய்வம் நின்று கொல்லும் எனும் தமிழ் முதுமொழி பொய்த்துப்போகவில்லை என பிரித்தானியாவின் கருணா, இராணுவத் தளபதிகள் மீதான இந்த தடை நிரூபித்துள்ளது.