இலங்கைக்கு சுற்றுலா வந்தபோது நாயை வாங்கிய பிரித்தானிய நபருக்கு நேர்ந்த சோகம்!
பிரித்தானியாவை சேர்ந்த நபரொருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணத்தால் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் அது தொடர்பில் அவர் மனைவி மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவால் Glynn Steel என்ற 54 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் இவர் வேகன் உணவு முறைகளை கடைப்பிடிப்பவர். தாவர உணவை மட்டும் உண்ணும் கொள்கையினை உடையவர்கள் வேகன் பிரிவினர் ஆவர்.
இவர்கள் எந்தவொரு கால்நடை அல்லது பறவை அல்லது பூச்சியின் இறைச்சியையோ முட்டையையோ பால் அல்லது பாலிலிருந்து கிடைக்கும் தயிர், யோகர்ட், மோர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, போன்ற பொருட்களையோ, உண்பதில்லை.

இந்நிலையில் Glynn steel கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலே இருந்து வந்தார், இதற்கு அவர் ஒரு காரணமும் கூறினார். அதாவது தடுப்பூசி உற்பத்தி செயல்பாட்டில் விலங்குகள் தொடர்பான பரிசோதனையும் இருக்கிறது எனவும் அதன் காரணமாக தடுப்பூசியை செலுத்தி கொள்ள முடியாது என்றார்.
கொரோனா தடுப்பூசி விடயத்தில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு இதன்மூலம் அவரது தார்மீக எதிர்ப்பை காட்டினார். இந்நிலையில் தான், அக்டோபர் மாத கடைசியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட Glynn Steel சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.

விலங்குகள் மீது மிகுந்த பாசம் கொண்ட Glynn Steel கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுலா சென்றார். அங்கிருந்து ஒரு நாயை வாங்கி வந்து வீட்டில் பாதுகாத்து வளர்த்து வந்தார், இதன் பின்னர் தான் அவருக்கு ஜலதோஷம் முதல் ஏற்பட்டு பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், இது குறித்து கொரோனா தொற்றால் உயிரிழந்த Glynn Steel மனைவி எம்மா கூறுகையில், திடீரென என் கணவருக்கு வீட்டில் உடல்நிலை மோசமானது. கடந்த நவம்பர் 2ஆம் திகதி ஆம்புலன்ஸ் கூட உடனே கிடைக்கவில்லை, இதையடுத்து சுயநினைவை இழந்த Glynn-ஐ நான் தனி ஆளாக போராடி காருக்குள் இழுத்து சென்று உள்ளே போட்டு வைத்தியசாலைக்கு கூட்டி சென்றேன்.
அவரை எப்படி காரில் ஏற்றினேன் என இப்போது வரை எனக்கு தெரியவில்லை. வைத்திய்சாலையில் ஐசியூவில் இருந்த Glynn Steel, நான் இந்த அளவுக்கு உடல்நலம் குன்றி இருந்ததில்லை, நான் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என என்னிடம் வேதனையுடன் சொன்னார், மேலும் யாராவது எனக்கு தடுப்பூசி செலுத்துங்கள் என கெஞ்சினார்.
இதேவேளை நிலைமை கைமீறி போய்விட்டதால் அவரை காப்பாற்றமுடியவில்லை. நான் தினமும் தனிமையாக உணர்கிறேன், அவரை நினைத்து தினமும் இரவில் தூங்காமல் அழுது கொண்டிகிறேன். நான் அனைவருக்கு சொல்வது, தயவு செய்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.
விலங்குகளில் சோதிக்கப்பட்டது என்பதால் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை, ஆனால் இதெல்லாம் மருத்துவ சூழ்நிலைகளுக்கு பொருந்தாது என கூறியுள்ளார்.