பிரித்தானிய அமைச்சரவையில் இலங்கை வம்சாவளி! யார் இவர்? சுவாரஸ்ய தகவல்
பிரித்தானியாவில் போரிஸ் ஜான்சன் பிரிதமர் பதவிலிருந்து விலகியதையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தெர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் லிஸ் டர்ஸின் புதிய அமைச்சரவையில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த நபரொருவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் லீஸ் ட்ரஸின் அமைச்சரவையில் புதிய சுற்றுச்சூழல் செயலாளராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 36 வயதான ரணில் ஜெயவர்தன (Ranil Malcolm Jayawardena) என்பவரே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தந்தை 1978ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்.
இந்த நிலையில், பிரித்தானியாவின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான திணைக்களத்தை வழிநடத்தும் அதேவேளையில், ஜெயவர்தன உணவு மற்றும் விவசாயக் கொள்கைகளுக்குப் பொறுப்பாகவும் இருப்பார் என கூறப்படுகின்றது.
முன்னதாக சர்வதேச வர்த்தகத் துறையில் கனிஸ்ட அமைச்சராக இருந்த ஜெயவர்தன, புதிய பிரதம மந்திரி டிரஸின் ஆரம்பகால ஆதரவாளராக செயற்பட்டு வந்தார்.
மேலும், 2015 மே மாதத்தில் முதன் முதலில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.