பிரித்தானியாவில் அரிய வகை பாதிப்புடன் பிறந்த குழந்தை!
பிரித்தானியாவில் கேஸ்ட்ரோசைஸிஸ் என்னும் பிறவி குறைபாட்டால் 5 வரங்களுக்கு முன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
பிரித்தானையாவில் Great Manchester பகுதியில் வசித்து வரும் 29 வயதான ஆஸ்லி பவ்லர்-கார்ல் தம்பதியினருக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது.
ஆஸ்லி பவ்லர் கருவுற்று 12 வாரங்களுக்கு பின் வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்ட இந்த செய்தியை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்ததாக அவர்கள் கூறினர். தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.
கேஸ்ட்ரோசைஸிஸ் (Gastroesophagitis) என்னும் பிறவி குறைபாடு என்பதாகும், ஒரு குழந்தை தாயின் கருவில் வளரும் போது குழந்தையின் முன்புற உடல் சுவர் ஒன்றாக இணைக்கத் தவறிவிடும் நிலை. இதனால் வயிற்று தோல் முழுமையாக வளராமல் சிறிய துவாரம் இருக்கும். உடலின் அந்த பகுதி சரியாக மூடப்படாததால் தொப்புளுக்கு வலதுபக்கமாக, உறுப்புகள் வளர வளர உடலில் இருந்து வெளியேற ஆரம்பிக்கும்.குழந்தையின் வயிற்றுப் பகுதியில் இந்த பாதிப்பு ஏற்படும்.
குறித்த பாதிப்புக்குள்ளான குழந்த பிறந்த உடனேயே இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. பிறந்த முதல் ஒரு வாரத்துக்கு உணவு ஏதும் கொடுக்கப்படவில்லை. பிறந்த முதல் 3 வாரங்கள் வைத்தியசாலையில் வைத்து கண்கானிக்கப்பட்டது.
குழந்தையின் உடலுக்கு வெளியே வந்துள்ள உறுப்புகள் அதிக வெப்பம் படாமலும் காய்ந்து போகாமலும் இருக்க குழந்தையை வைத்தியர்கள் பாதுகாப்பாக கவனித்து வருகின்றனர். மேலும், இந்த குழந்தை பிறந்து 5 வாரங்கள் ஆகின்றன.
இதேவேளை, இந்த அபூர்வ குழந்தைக்கு கோயா எனப் பெயரிடப்பட்டுள்ளது. கோயா என்றால் ஹவாய் மொழியில் போராளி என்று அர்த்தம்.