கைதாகி பல மணி நேரத்தின் பின் விடுதலையான உதயநிதி ஸ்டாலின் ; வெளியில் வந்து கூறிய விடயம்
அவதூறு வழக்கில் கைதான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் கருத்து தெரிவித்த உதயநிதி, தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் யாரையும் நான் தவறாக பேசவில்லை; காவிரி பிரச்சினையை அவையில் எழுப்பக்கூடாது என்பதற்காக இந்த அரசு திசை திருப்பியுள்ளது என கூறினார்.

கண்டனம்
திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,
திமுக தலைவரின் உத்தரவை ஏற்று தஞ்சையில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினோம். நான் யாரையும் தவறாக பேசவில்லை, பேசாத ஒன்றை பரப்பி உள்ளனர்.
திசை திருப்பும் முயற்சியாக, நான் பேசாத ஒன்றை பேசியதாக திரித்து வீடியோவை பரப்பி உள்ளனர். . தீவிரவாதியை போல், என்னை 400 கி.மீ.க்கு அழைத்து சென்று செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை நடத்தினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு தரம்கெட்ட அரசு கைது செய்துள்ளது. இதற்கு நான் அஞ்சவில்லை. எனக்கு மனைவி, மகள் உள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்களையும் எனது தாயாக, சகோதரிகளாக நான் பார்க்கிறேன்.
எந்த தவறான எண்ணத்திலும் பெண்களை தரம் தாழ்த்தி பேச வேண்டும் என்று நான் எண்ணவில்லை. ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் நான் பேசவில்லை, சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன். பேசுவேன். ஒருசில தலைவர்கள் நான் பேசியதை ஆராயாமல் கண்டனம் தெரிவித்தது எனக்கு வருத்தம் தருகிறது.
அரசின் பொய் வழக்கு போட்டு பயமுறுத்து பார்க்கின்றனர். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை என தெரிவித்துள்ளார்.