நாளை பதவியேற்கும் TVK எம்.எல்.ஏ.க்கள் ; உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்த பதவி
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளை வென்றது. இதையடுத்து, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது.
அதேவேளை, 59 தொகுதிகளை மட்டுமே வென்ற திமுக தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. இதனிடையே, தமிழக சட்டசபை நாளை கூட உள்ளது.

சட்டமன்றக்குழு தலைவர்
இதில் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில், திமுக சட்டமன்றக்குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், துணைத்தலைவராக கே.என்.நேருவும், திமுக கொறடாவாக ஏ.வ.வேலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 7ம் திகதி நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திமுக தலைமை இன்று அறிவித்துள்ளது.