கனடாவில் உபர் வழியாக கஞ்சா விநியோகம்
கனடாவில் பிரபல உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஊபர் ( Uber) நிறுவனத்தின் ஊடாக கஞ்சா போதை பொருள் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் முன்னணி உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்றான ஊபர் நிறுவனம் இணைய வழியில் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்யும் லேப்லீ (Leafly) என்னும் நிறுவனத்துடன் இணைந்து இந்த போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
கனடாவில் இவ்வாறு உபர் நிறுவனத்தின் ஊடாக கஞ்சா போதை பொருள் விநியோகம் செய்யப்படுகின்றது.
உபர் நிறுவனம் முதல் தடவையாக கஞ்சா போதை பொருளை விநியோகம் செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
19 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கஞ்சா போதை பொருளை பெற்றுக் கொள்வதற்காக ஆர்டர் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
விநியோகத்தின்போது வயது உள்ளிட்ட தகுதிகளை பூர்த்தி செய்துள்ளாரா என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டதன் பின்னர் போதை பொருள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக கனடாவில் கஞ்சா போதை பொருள் விநியோகம் விற்பனை என்பன முற்று முழுதாக தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது கனடாவில் சட்ட ரீதியான கஞ்சா போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளது.