ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர்!

protest presidential office UPP
By Krishna Mar 21, 2021 06:36 PM GMT
Report

இராஜதந்திர வீசாவில் வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் தங்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்காக வழங்கப்பட்ட அனுமதியை , வெளிநாடுகளில் பணிபுரிந்து நாட்டுக்கு திரும்பும் பணியாளர்களுக்கும் வழங்குமாறு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியினரினால் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத்பொன்சேகா , ஹரின் பெர்னாண்டோ , ஹெக்டர் அப்புஹாமி , காவிந்த ஜயவர்தன , ஹர்ஷன ராஜகருணா , முஜிபுர் ரஹ்மான் , நளின் பண்டார , மனுஷ நாணயக்கார , ஜே.சீ. அலவத்துவல , சுஜீத் பெரேரா மற்றும் திலீப் வெத ஆராச்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் , அவர்களுடன் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ள பணியாளர்கள் சிலரும் , தற்போது வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ள பணியாளர்களின் உறவினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

சுமார் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், 'ஒரு நாடு - ஒரே நீதி' 'வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு இராஜதந்திரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி , வெளிநாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்பும் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

நாடும் சித்தியடையவில்லை , சேரும் சித்தியடையவில்லை , வாக்களித்தவர்களும் சித்தியடையவில்லை, ' ஹோட்டலில் தனிமைப்படுத்தும் அரசாங்கத்தின் சதியிலிருந்து வெளிநாட்டு பணியாளர்களை பாதுகாப்போம்' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்பாட்டதாரர்கள் ஏந்தியிருந்தனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டதார்களின் மத்தியிலிருந்த பெண்ணொருவர் தாம் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக செயற்பட்டு வந்ததாகவும், நாடு திரும்புவதற்காக பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் தெரிவித்ததுடன், கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் பணிப்பெண்கள் உள்ளிட்ட ஏனைய தொழிலாளர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும்,

அவர்கள் தொடர்பில் இலங்கைக்காக அந்நாட்டில் இயங்கிவரும் தூதரங்கங்கள் கவனம் செலுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டதுடன், பணிப்பெண்கள் தூதரங்கங்களுக்கு முன்னால் வீதிகளில் இருப்பதாவும், அவர்களுக்கு போதிய உணவு, நீர் என்பன கிடைப்பதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மற்றுமொரு பெண் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக தான் வெளிநாடிலிருந்து வந்திருந்ததாக தெரிவித்ததுடன், தற்போது வெளிநாட்டிலிருக்கும் பணிப்பெண்களின் நிலைமையை பார்த்து கவலையடைவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோளும் விடுத்திருந்தார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்ததுடன், ஆர்ப்பாட்டதாரர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்ததன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US