ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது
நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவகமுவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகக் கொரதொட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில்,

இருவர் கைது
01 கிலோகிராம் 69 கிராம் 540 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.
இதேவேளை, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கு அருகில் வெல்லம்பிட்டி பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது, 60 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பின்னவல - வக பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபராவார்.
மேலும், இக் கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.