முச்சக்கரவண்டி திருட்டு: இரு இளைஞர்கள் அதிரடி கைது, உதிரிப்பாகங்கள் மீட்பு
முச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, வத்தளைப் பகுதியில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட வாகனங்களின் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
15 ஆம் திகதி பதிவான முச்சக்கரவண்டி திருட்டுப் முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின்படி, வத்தளைப் பகுதியில் வைத்துப் பம்பலப்பிட்டி பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
சந்தேகநபர்களிடமிருந்து 5 முச்சக்கரவண்டி எஞ்சின்கள், 2 முச்சக்கரவண்டி சேஸிகள் , 1 முச்சக்கரவண்டி, 1 மோட்டார் சைக்கிள் மற்றும் பல இலக்கத்தகடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 28 வயதுடைய வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்துப் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.