தமிழர் பகுதியில் 5 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த பெரும் துயரம் ; கதறும் உறவுகள்
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பானம்வெளி கிராமத்தில் நேற்றிரவு (20) புகுந்த காட்டு யானையை விரட்ட முயன்ற குடும்பஸ்தர் ஒருவர், யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகக் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் தம்பானம்வெளி பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை
இவரது உடலை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
நேற்றிரவு (20) சுமார் 11.30 மணியளவில் தமது வீட்டின் தோட்டப் பகுதிக்கு வந்த காட்டு யானையை விரட்டுவதற்காகச் சென்ற வேளையே அவர் எதிர்பாராதவிதமாக யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். நசீர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன், மேலதிக மரண விசாரணைகளையும் முன்னெடுத்தார்.
ச்சம்பவம் குறித்துக் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.