இரு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழப்பு
பன்னிப்பிட்டிய, பொல்வத்த சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
தலவத்துகொட பகுதியில் இருந்து வந்த மோட்டார் வாகனமொன்று பொல்கொடுவ வீதிக்கு திரும்ப முற்பட்ட போது, பன்னிப்பிட்டிய பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய இளைஞர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யட்டியாந்தோட்டை, மல்லகொட பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய கசுன் பண்டார மற்றும் மீகொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பிரபோத மதுஷான் என்ற இளைஞர்களுமே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.