மொனராகலை வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு வயது குழந்தை
வெல்லவாய மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியும் டிப்பர் வாகனமும் மோதியதில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
விபத்தின் போது முச்சக்கர வண்டியில் தாய், தந்தை மற்றும் 2 வயது குழந்தையொருவர் பயணித்துள்ளனர்.
காயமடைந்த நிலையில் தாயும் தந்தையும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக தாய் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதியை வெல்லவாய பொலிஸார் கைது செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபரான சாரதியை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.