இரண்டு பெண்கள் கொலை; 3 வருடங்களின் பின் சிக்கிய சந்தேகநபர்
மூன்று ஆண்டுகளாக இரு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கொழும்பு ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பெண்ணொருவர் கழுத்து நெரித்து கொலை
சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை (24) மதுகம – வெலிகந்த பகுதியில் மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் லிந்துலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபர் , 2023ஆம் ஆண்டு தலவாக்கலை கிரேட் வெஸ்டன் மலைப்பகுதியில் பெண்ணொருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் தலங்கம பகுதியில் 57 வயது பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகிய இரு வழக்குகளுடனும் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.