லண்டனில் பூங்காவில் அமர்ந்திருந்த சிறுமியை கடுமையாக தாக்கிய இளம் பெண்கள்! வீடியோ
பிரித்தானியாவில் லெய்செஸ்டர் ஷையர் பகுதியில் உள்ள ஆஸ்பியின் ஸ்டேஷன் ரோட்டில் ஒரு பூங்கா உள்ளது.
குறித்த பூங்காவில் சிறுமி ஒருவரை 2 பெண்கள் சரமாரியாக அடித்து உதைத்து தாக்கும் காட்சிகள் டுவிட்டரில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டூவிட்டரில் டீனோ என்ற பயனரால் பதிவேற்றம் செய்யப்பட்ட குறித்த வீடியோவில், இந்த சம்பவம் எனது தங்கைக்கு நடந்தது என கூறியுள்ளார்.
இந்த காணொளி வைரலானதை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறினர்.
இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் காணொளி வைரலாகி பயனர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
This happened to my younger step sister this weekend… wouldnt say boo to a ghost yet pissed up girls in the park jumped her????
— deano (@Deanceejay13) June 26, 2023
Everyone share this please pic.twitter.com/ZGZZoxKVPm
சிறுமியை தாக்கிய பெண்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் தாக்குதலுக்குள்ளான சிறுமி விரைவில் குணம் அடைய வாழ்த்துவதாக ஒரு பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.