சிறுவர்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கை
உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையின்படி, இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் ஆபத்தான அளவை அடைந்துள்ளன.
அத்துடன் சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவை குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகளவில், 18 வயது வரையான 120 கோடி சிறுவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வீடுகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
அதன்படி, கடந்த மாதத்தில் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுவர்களில் 17 சதவீதம் பேர் அதன் மிகக் கடுமையான வடிவங்களுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் தலை, முகம் அல்லது காதுகளில் அடிக்கப்படுவது அல்லது கடுமையாக மீண்டும் மீண்டும் தாக்கப்படுவது உட்பட துன்புறுத்தல்கள் நாடுகளுக்கு இடையே பரவலாக வேறுபடுகின்றன.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா முழுவதும், சுமார் 70 சதவீத சிறுவர்கள் தங்கள் பாடசாலைப் பருவத்தில் உடல் ரீதியான துன்புறுதல்களுக்கு உள்ளாகின்றனர்,
இந்த நிலையில், வறுமை, இனவெறி மற்றும் பாகுபாடு போன்ற பரந்த சமூக காரணிகள் சிறுவர்களின் உடல் ரீதியான தண்டனையின் அபாயத்தை மேலும் அதிகரிக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.