மட்டக்களப்பில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட பெண்கள் இருவர்
மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக இரு பெண்கள் வாழைச்சேனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 36 மற்றும் 45 வயதுடைய இரு பெண்களே பிறைந்துரைச்சேனை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புலனாய்வுப் பிரிவினர் வாழைச்சேனைப் பொலிஸார் மற்றும் சிறுவர் மகளிர் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியின் உதவியுடன் குறித்த இருவரும் கைதாகியுள்ளனர்.
கைதான பெண்களில் ஒருவரிடமிருந்து 500 மில்லி கிராம் ஹெரோயின் 23550 மில்லி கிராம் கேஜி போதைப்பொருள் 60 போதை மாத்திரைகளும் மற்றவரிடமிருந்து 17330 மில்லி கிராம் கேஜி போதைப்பொருள் 25 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து வேறு சில சந்தேக நபர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைக:ளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக போதை வியாபாரத்தில் ஈடுபடுவோர் தொடர்பில் காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் வாழைச்சேனை விஷேட அதிரடிப்படையினர் விசேட நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .