நீரில் மூழ்கி மாயமான இரு இளைஞர்கள் ; தீவிரமடையும் தேடுதல்
வெவ்வேறு பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற வனமெடகம, பிபில பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
தேடுதல் பணி
நாவுல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்தபோது நேற்று (20) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, நேற்று (20) அஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹங்கம கடலில் நீந்தச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு காணாமல் போனவர் வத்தளையைச் சேர்ந்த 24 வயதுடையவர். காணாமல் போன இளைஞர்களை தேடும் பணியில் நாவுல மற்றும் அஹங்க பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.