இரண்டு சந்தேகத்திற்கிடமான மரணங்கள்; குழப்பத்தில் பொலிஸார்
கந்தான மற்றும் வத்தளை பிரதேசங்களில் இரண்டு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தான புனித சவேரியார் பகுதியிலுள்ள வீடொன்றில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வத்தளை ஹெந்தல வீதி பகுதியில் உள்ள கராஜ் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வாகனத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நீர்கொழும்பு, கந்தசுரிதுகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.