கொழும்பில் தம்பதியர் செய்த மோச செயல் ; நூற்றுக்கணக்கான ஆபாச காணொளிகளை இணையத்தில்
கொழும்பு ராஜகிரியவின் வெலிக்கடை பகுதியில் தம்பதியினர் இணைந்து செய்த மோச செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக விசாரணைகள்
வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய ஆபாச காணொளிகளை இணையத்தில் பதிவேற்றிய திருமணமான தம்பதியினர் மிரிஹான காவல்துறையின் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்பதியினர் 37 மற்றும் 36 வயதுடையவர்கள், கணவர் ஒரு கணினி பொறியாளர் என்றும் மனைவி ஒரு உளவியல் ஆலோசகர் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் 334 காணொளிகளை சம்பந்தப்பட்ட வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று (09) அளுத்கடே நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுகேகொடை பிரிவுக்கு பொறுப்பான மூத்த காவல் கண்காணிப்பாளர் மங்கள தெஹிதெனியவின் அறிவுறுத்தலின் பேரில் பெண் தலைமை ஆய்வாளர் சந்திமா சபுகொட தலைமையில் நடைபெற்று வருகின்றன.