சுவிஸில் ஈவிரக்கமின்றி மனைவியை கொலை செய்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த கதி
சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை படுகொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தின் டிசினோ பகுதியில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 40 வயது பெண்மணி, மர்மமான முறையில் உயி்ரிழந்தார்.

கணவனுக்கு 19 வருட சிறை - சகோதரனுக்கு ஆயுள் தண்டனை
சம்பவம் தொடர்பில் அந்நாடு பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவ்ல்கள் வெளிவந்தன.
பெண் உறங்கிக் கொண்டிருந்த போது, கணவர் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து பெண்ணின் தலையில் பிளாஸ்டிக் பையை மாட்டி, சுமார் 10 நிமிடங்கள் மூச்சுத் திணறச் செய்து அவரைக் கொலை செய்துள்ளமை விசாரணையில் தெரிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் கணவரும், மைத்துனரும் சேர்ந்து கொலை செய்தமை அம்பலமானது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டு மனைவியை கொலையை செய்த கணவனுக்கு 19 வருடங்கள் சிறைத் தண்டனையும் சகோதரனுக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மனைவியை கொலை செய்ததோடு அதை குற்றவாளிகள் , இயற்கையான மர ணம் என நாடகமாடியதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் ஈவிரக்கமின்றி மனைவியை கொன்ற கணவருக்கும், சகோதரருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் விதித்த தணடனை வரவேற்கத்தது என சமூக வலைத்தளத்தி பலரும் பதிவிட்டுள்ளனர்.