மனைவி வீட்டை வீடியோ எடுத்த இருவருக்கு விளக்கமறியல்
பன்னல பகுதியில் அமைந்துள்ள கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் வீட்டை வீடியோ எடுத்தபோது கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.
வீட்டில் இருப்பவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பன்னல பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோதே மேற்படி இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தில் கைதான 21 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பின்னணியில் கெஹல்பத்தர பத்மே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை பத்மேவின் தந்தையின் கொலைக்கு கணேமுல்ல சஞ்சீவதான் காரணம் என்றும் இதற்காக பழிவாங்கும் நோக்கில் சஞ்சீவவை கொலை செய்ததாகவும் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.