166 பயணிகளுடன் ஒன்றுடன் ஒன்று மோதிய இரு விமானங்கள் ; அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் கோபா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானமும், யுபிஎஸ் நிறுவனத்தின் போயிங் 767 சரக்கு விமானமும் மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (14) இரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விமானப் போக்குவரத்து
இதன்போது, கோபா எயார்லைன்ஸ் விமானத்தின் இறக்கையின் நுனிப்பகுதி, யுபிஎஸ் சரக்கு விமானத்தின் முன்பகுதியில் மோதியுள்ளது. பனாமா நகரிலிருந்து வந்த கோபா எயார்லைன்ஸ் விமானத்தில் 166 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் முனையத்திற்குக் கொண்டு வரப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இரு பயணிகளுக்கும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்துள்ளதுடன், அவர்களுக்குச் சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கோபா எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட மறுநாளே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.