பெருமதியான மர்மபொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய இரண்டு பேர்!
புத்தளம் கற்பிட்டி சின்னக்குடியிருப்புப் பகுதியில் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பேர் கற்பிட்டி பொலிஸாரினால் இன்றைய தினம் (09-01-2023) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ் போதைப் பொருளை முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்வதாக பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தலவலுக்கமைய கற்பிட்டி பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனைக்குற்படுத்திய போது ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது இரண்டு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கற்பிட்டி துரையடி, மற்றும் மட்டக்குழி பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரில் ஒருவர் பிரபல போதை வியாபாரியெனவும் பல தடவைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் 2 கோடிக்கு அதிக பெறுமதியென பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள், 18000 பணம், இரண்டு கையடக்க தொலைப்பேசிகள் மற்றும் கடத்திச் செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டி ஆகியவற்றை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.