வெடிபொருட்களுடன் முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் கைது
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த இருவர் பூநகரி பகுதியில் வெடிபொருட்களுடன் கிளிநொச்சி பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் நேற்று (07) மாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு – வள்ளுவர்புரம் றெட்பான விசுவமடுவினை சேர்ந்த 22 வயது இளைஞர் மற்றும் குரவில் உடையார்கட்டு பகுதியினை சேர்ந்த நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்களிடம் ரி.என்.ரி வகை வெடிபொருள் 3.8 கிலோகிரம், சி-4 வகை வெடிபொருள் 4.4 கிலோக்கிரம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கிளிநொச்சி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.