கொரோனாவால் மரணிப்போர் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரு இடங்கள்!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய காணிகள் தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், அந்த காணிகளை பயன்படுத்துவதற்கான இறுதி அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என்றும், கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான காணிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பிரதேச செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள் அனைவருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளினால் வழங்கப்படும் தகவல்களுக்கு அமைய, பொருத்தமான காணிகள் தெரிவு செய்யப்படும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.