மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு; அம்பாறையில் தொடரும் சோகம்
அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணி இடைநிறுத்தப்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் மீண்டும் ஆரம்பமான நிலையில் காணாமல் சென்ற 2 ஜனாஸாக்கள் இன்று(28) காலை மீட்கப்பட்டுள்ளன.
மீட்புப்பணிகள் நேற்று இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஆரம்பமாகி இருந்தது.
இதன்போது எஞ்சிய இரு சடலங்கள் ஆங்காங்கே கிடந்த நிலையில் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட சடலங்கள் உழவு இயந்திர சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரது உடலாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நேற்று(27) மாலை வரை 04 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இந்த சம்பவமானதை அம்ப்பாறையில்,துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.