பேருந்துடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி இருவர் பலி
ஹொரவ்பத்தானை -கபுகொல்லாவ புகுலேவ சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் - மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று (30) மாலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்துடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஹொரவ்பொத்தானை- நெலுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பாத்ல சிஹான் (21வயது) மற்றும் பிரவீன் காவிந்த இலங்க சிங்ஹ (20 வயது) ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை கைதுசெய்துள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளில் மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.