திருகோணமலையில் வேன் மரத்துடன் மோதியதில் இருவர் காயம்
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் சிறிய ரக வேன் ஒன்று மரமொன்றுடன் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று ( 27) காலை இடம்பெற்ற விபத்தில் வவுனியா – பட்டாணிச்சூடு பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 17 வயதுடைய இருவர் வேனில் பயணித்த நிலையில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் முதலில் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாகவே வேன் பாதையை விட்டு விலகி மரத்துடன் மோதியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.