இரு முன்னாள் அரச அதிகாரிகள் அதிரடி கைது ; அம்பலமான மோசடி
அரச வேலை பெற்றுத்தருவதாக கூறி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில், இரண்டு சந்தேகநபர்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று(24) கைது செய்துள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாணிப்புத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி அமைச்சரின் பணியாளருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் இருவரும் துறைமுக அதிகாரசபையில் அரசாங்க உத்தியோகம் பெற்றுத்தருவதாக கூறி நபரொருவரிடம், 250,000 ரூபாய் பணத்தினை இலஞ்சமாக கோரியுள்ள நிலையில் வேலை கிடைத்த பின்னர் மீண்டும் 245,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.