தாயார் வெளிநாட்டில்; தந்தை இரண்டாவது திருமணம்; பெரியதந்தையால் சிறுமிகள் இருவருக்கு நேர்ந்த கொடுமை
நோர்வூட் - சாமிமலை ஸ்டொக்கம் தோட்ட பகுதியில் இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறுமிகளின் பெரிய தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
12 மற்றும் 13 வயதான இரண்டு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பெரிய தந்தை கைது செய்யப்பட்டிருந்தார்.
பெரிதந்தையின் பாராமரிப்பில் சிறுமிகள்
இந்நிலையில் சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்திய போதே அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இரண்டு சிறுமிகளின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் தந்தை மறுமணம் முடித்த நிலையில் இரண்டு சிறுமிகளும் பெரிதந்தையின் பாராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளனர்.
பெரிய தந்தையானால் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி வந்தமை தொடர்பில் சிறுமிகள் தனது வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளனர். அதனை அடுத்து பாடசாலையின் நிர்வாகத்தின் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையினை பெற்றுகொள்வதற்காக டிக்கோயா -கிளங்கன் ஆதாரவைத்திய சாலையில் சிறுமிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நோர்வூட் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்