பாடசாலை கட்டடப் பணிக்காக வந்த இரு சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம்
அநுராதபுரம் கெக்கிராவை, சமகிகம பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல் குவாரி (கல் அகழ்வு குழி) ஒன்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் இன்று (17) பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மேலதிக விசாரணை
ஹபுத்தளை பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 41 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் உட்பட ஐந்து பேரடங்கிய குழுவினர் அங்கு நீராட சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் மூவர் நீராடிவிட்டுத் திரும்பியுள்ளனர்.
எனினும், இவ்விரு சகோதரர்களும் அங்கேயே தங்கியிருந்த போதே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழுவினர் கெக்கிராவையில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக இப்பகுதிக்கு வருகை தந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாகக் கெக்கிராவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.