கற்பிட்டியில் வள்ளம் கவிழ்ந்து சகோதரர்களான இரு சிறுவர்கள் பலி
கற்பிட்டி, குரக்கன் ஹேன பகுதியில் உள்ள ஏரியில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 7 வயது சிறுவனும் 13 வயது சிறுமியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்பத்தினர் நேற்று (11) பிற்பகல் கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படும் வலைகளை எடுத்துவருவதற்காக வள்ளத்தில் பயணித்துள்ளனர்.
இதன்போது வள்ளம் கவிழ்ந்ததில், தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகளும் நீரில் மூழ்கிய நிலையில் கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிள்ளைகள் இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த பிள்ளைகளின் தாய் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், தந்தை மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.