வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட இரு சடலங்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
கொரகீன பகுதியில் சட்டபூர்வமற்ற தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் காலி ஊரகஸ்மங்ஹந்தியவில் கொரகீன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 36 வயதான நில்மின் பெண் கொல்லப்பட்டுள்ளார். 39 வயதான நிஹால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்டுள்ளார்.
நில்மினி அதிகமாக தொலைபேசியில் பேசுவதாலேயே இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதால், நிஹால் சந்தேகமடைந்திருந்தார்.
கம்பி ஒன்றினால் நில்மினியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, அவரது சடலத்திற்கு அருகில் பூங்கொத்து ஒன்றை வைத்துள்ளார். பின்னர், வீட்டின் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சகோதரி நேற்று (21) அவருக்கு தொலைப்பேசி அழைப்பு ஏற்படுத்தியுள்ளார். எனினும், பதில் கிடைக்காத நிலையில், பொலிஸில் முறைபாடு செய்துள்ளார். அதன்படி, பொலிஸார் குறித்த வீட்டை சோதனையிட்ட போது இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.