சூட்சகமான முறையில் விற்பனை... மர்ம பொருட்களுடன் சிக்கிய இரு சந்தேக நபர்கள்!
புத்தளம் - கற்பிட்டி நகரில் ஒருதொகை போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து வடமேற்கு கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் நேற்று முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அதிகாரிகள் கற்பிட்டி நகரில் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கர வண்டி ஒன்றை பரிசோதனை செய்தனர்.
குறித்த முச்சக்கர வண்டியில் மிகவும் சூட்சகமான முறையில் விற்பனை செய்யும் நோக்கில் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படும் 800 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி - புதுக்குடியிருப்பு மற்றும் ஏத்தாளை பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 49 வயதுடையவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் அவர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.