யாழில் பெண்ணுடன் கைதான இருவர் ; விசாரணையில் அம்பலமான விடயம்
யாழ்ப்பாணத்தில் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்தமை , உடைமையில் வைத்திருந்தமை மற்றும் உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த சாவகச்சேரி பொலிஸார் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த பிரதான சந்தேகநபரை கைது செய்தனர்.

விசாரணைகள்
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் . கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, வெவ்வேறு இடங்களில் அடகு வைத்து பணம் பெற்றமை தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் , அடகு வைக்கப்பட்ட நகைகளை மீள பெற விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ள நிலையில் ,அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.