தமிழர்ப்பகுதியில் இருவர் அதிரடி கைது!
திருகோணாமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவரை இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இப்போலி நாணயத்தாளை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்ய முயற்சிக்கும் போது பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து போலி நாணயத்தாளை கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் கிண்ணியா உதவிப் பொலிஸ் அதிகாரி ராஜித குருசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற விசாரணைகளை அடுத்து இப்போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட அச்சகத்தினை சேர்ந்த மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.