இலங்கையை உலுக்கிய சம்பவம் ; தாயுடன் சென்ற பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பெரும் துயரம்
பேலியகொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று பலியானதுடன், மேலும் மூவர் காயமடைந்தனர்.
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி, பேலியகொட - ரோஹண விஹாரைக்கு அருகில் பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவத்தின்போது, முச்சக்கரவண்டியில் தமது தாயுடன் பயணித்த குழந்தை காயமடைந்த நிலையில் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
களனி, பட்டிய சந்தியைச் சேர்ந்த 3 மாதங்களும் 23 நாட்களுமேயான பெண் குழந்தையே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தையின் தாயும், முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குழந்தையின் சடலம் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.