வஹாபிசத்தை பரப்பிய இருவர் மட்டக்களப்பில் கைது
மட்டக்களப்பில் சமூக வலைத்தளங்களில் இனங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும் கருத்துக்களை பகிர்ந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரு்ம்கடந்த நவம்பர் 21ஆம் திகதி கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட 06 பேரில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வன் உம்மா என்கிற வாட்ஸப் குழுவை அமைத்து கட்டாரில் இருந்துகொண்டு வஹாபிசத்தைப் பரப்பியதுடன், வீடியோக்களையும் பகிர்ந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் முஸ்லிம்களின் மனதில் விரிசலை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஏற்கனவே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெற்ற தகவலை தொடர்ந்தே குறித்த சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.