பராசூட் சாகசத்தின் போது இரு இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட நிலை
பதுளை வெல்லவாய ஊவா குடாஓயா கமாண்டோ ரெஜிமெண்ட் பயிற்சி நிலையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வான் சாகச நிகழ்வின் போது இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று (3) இடம்பெற்றது. பயிற்சிகளைப் பெற்று வெளியேறும் இராணுவ வீரர்களுக்காக விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, வான் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு வீரர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.
இவர்களில் ஒருவரது பரசூட் மரங்கள் நிறைந்த பகுதியிலும் மற்றையவரது பரசூட் தரையிலும் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இரண்டு வீரர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.