ஒரே நாளில் திருமணம் செய்து ஒரே நாளில் குழந்தை ; இரட்டை சகோதரிகளுக்கு நடந்த அதிசயம்
கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் தங்களது முதல்குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிரா மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் சிறுவயது முதல் கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை நிகழ்வுகளை ஒன்றாகவே கடந்து வந்துள்ளனர்.

குடும்பத்தினரிடையே மகிழ்ச்சி
இருவரும் தாதியர் தொழிலைத் தேர்ந்தெடுத்து, ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்களது பணியை ஆரம்பித்தனர்.
அவர்களது ஒற்றுமை திருமணத்திலும் தொடர்ந்தது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி இருவரும் ஒரே திருமண நிகழ்வில் தங்களது வாழ்க்கைத் துணைகளை மணந்தனர்.
பின்னர் கணவர்களுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, அதிரா கட்டாரிலும் ஆர்யா ஓமானிலும் தாதியர்களாக பணியாற்றினர்.
வட்டிக்கு விட்ட இடத்தில் மலர்ந்த தகாத உறவு ; காதல் கணவருக்கு மனைவி செய்த கதிகலங்க வைக்கும் சம்பவம் ; நீதிமன்றின் பரபரப்பு தீர்ப்பு
இந்தநிலையில்,சில மணி நேர இடைவெளியில் இருவரும் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
இந்த இரட்டை சகோதரிகள், தங்களது முதல் குழந்தைகளின் பிறப்பிலும் ஒரே நாளை பகிர்ந்துகொண்டது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.