200வது பிறந்தநாளைக் கொண்டாடிய இரட்டை சகோதரிகள்; வியப்பில் நெட்டிசன்கள்!
இந்த உலகில் மக்கள் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் தான் விரும்புகிறார்கள். அதற்காகதான் ஓடியோடி உழைக்கவும் செய்கின்றார்கள்.
இந்நிலையில் கடந்த 26 ஆம் திகதி 100வது பிறந்தநாளை கொண்டாடிய இரண்டு இத்தாலிய சகோதரிகள் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளனர்.
வைரல் காணொளி
1923 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பிறந்த பிரான்செஸ்கா மற்றும் மரியா ரிக்கார்டி, தங்கள் வயதை இரட்டிப்பாக்கி, அந்த நாளை "200வது பிறந்தநாளாக" கொண்டாடினர். ராய்ட்டர்ஸ் ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில்,
🎂 Turning 100 years old is already quite an achievement, but Italian twins Francesca and Maria Ricciardi went one step further, celebrating their '200th' birthday pic.twitter.com/kGcng8RBPj
— Reuters (@Reuters) January 25, 2023
இரட்டை சகோதரிகள் பிறந்தநாள் விழாவில் பலர் கலந்து கொண்டனர். பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டி ஒருவர் கூறுகையில், , "எங்களுக்கு 50 பேரக்குழந்தைகள் உள்ளதாகவும் இவ்வாளவு காலம் தான் வாழப்போகின்றேன் என்பது தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அந்த மூதாட்டி கூறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர், “200வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இது அரிது” மற்றொரு பயனர் எழுதியுள்ளார்.
“நான் வெளியே செல்லப் போகிறேன் ஆனால், அவர்கள் 100க்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. அவர்களின் தோல் அமைப்புகளைப் பாருங்கள். அது ஒரு கவனச்சிதறல்." , "அற்புதம் என மற்றுமொருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கின்னஸ் உலக சாதனையின் படி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா பிரான்யாஸ் மோரேரா மிகவும் வயதான பெண் மற்றும் வாழும் வயதான நபர் ஆவார்.
அவர் மார்ச் 4, 1907 இல் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார், பின்னர் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தார்.
மேலும் கடந்த 22 ஆண்டுகளாக, ரெசிடென்சியா சான்டா மரியா டெல் டுரா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.